திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பம் முற்றிலும் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவ்வழியாக அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.