புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கேசராபட்டி செல்லும் முக்கிய சாலையில் ஒரு சில தெருவிளக்குகள் மட்டுமே உள்ளதால், இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளதோடு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் நடந்து செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.