சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓ.புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமம் உள்ளது. அப்பகுதி நெடுஞ்சாலையின் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் பழுதான மின்விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.