திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்புநகர் விஸ்தரிப்பு, அருணாச்சல நகர், அன்புநகர் 11-வது தெரு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் பெரும்பாலான தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.