திருச்சி மாவட்டம் சந்தைப்பேட்டை அருகே வண்ணான்துறை பகுதியில் கடந்த மார்ச் மாதம் மின்வாரிய துறை சார்பில் 2 மின்கம்பங்கள் நடப்பட்ட நிலையில் தெருவிளக்கு பொருத்தப்படவில்லை. இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை தெருவிளக்கு அமைக்காததால், இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதியடைவதுடன், சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.