சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்பட்டி- பணங்குடி ரெயில்வே கேட் சாலையில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் பழுதான மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?