திருச்சி மாவட்டம் பழைய பால்பண்ணையில் இருந்து அரியமங்கலம் எஸ்.ஐ.டி. வரை செல்லும் வழியில் சர்வீஸ் சாலையில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இரவில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.