சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை, அகரம், ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கம்மாபுரம், விலக்கப்பாடி ஆகிய கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான முறையில் மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.