விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி ரோடு செல்லக்கூடிய இணைப்புச் சாலையில் போதிய மின்விளக்குகள் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் போதிய மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.