பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு பஸ் நிறுத்தம் அருகே பொங்குபாளையம் செல்லும் சாலை முன்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பே மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.