தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2026-05-10 11:12 GMT

திருச்சி மாவட்டம் 49-வது வார்டுக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெருவில் சில பகுதிகளில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் சட்டவிரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்திட வேண்டும்.

மேலும் செய்திகள்