பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து சேவை மையம் - டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலும், செங்குணம் அண்ணா நகர் ரேஷன் கடை அருகிலும் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பங்களில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் பல நாட்களாக எரியவில்லை. இதேபோல் செங்குணம் அண்ணா நகர் ஆட்டோ ஸ்டேண்ட் - எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகளும் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே எரியாமல் உள்ள மின்விளக்குகளை ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.