ஒளிராத மின்விளக்கு

Update: 2026-05-10 08:12 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உள்ள பட்டை அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின் புறம் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்திபன், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்