மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2026-05-03 14:12 GMT

ஏற்காடு தாலுகா பட்டிப்பாடி கிராமத்தில் 25 அடி பொதுச்சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. தற்போது இந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகள் ஆங்காங்கே குறுக்காக செல்லும் வகையில் மாற்றி அமைத்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் ஏற்படும் விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு முன்பு இருந்தது போன்று மின்கம்பங்களை மாற்றி அமைக்கப்படுமா? என்று இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்