அரியலூர் மாவட்டம் காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் காலனி தெருவில் கிழக்கு, மேற்கு வீதியில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சிதிலமடைந்து மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதே பகுதியில் பாதுகாப்பான இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.