விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் காளையார் கரிசல்குளம் மேற்கு மக்கள் குடியிருப்பில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அதனை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி நிகழ்வதற்கு முன்னதாக அதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.