கூடுதல் தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2026-05-03 10:18 GMT

கோவையை அடுத்த காளம்பாளையம் அருகே டாக்டர் கந்தசாமி நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவில் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்குகளும் முறையான பராமரிப்பில் இல்லாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும், கூடுதல் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்கவும் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்