விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் லட்சுமிபதி நகரில் உள்ள சில மின் விளக்குகள் கடந்த சில நாட்களாகவே எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.