கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-ஜெகதேவி சாலையில் உள்ள கொட்டாவூர், ஜி.நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு மற்றும் பகல் முழுவதும் தெருவிளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் மின் கட்டண சுமை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி அந்த ஊராட்சி மட்டுமின்றி அனைத்து ஊராட்சிகளிலும் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதை கண்காணித்து அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.