எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-02-08 12:14 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் பஞ்சாய்த்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை, கிராம நூலகம் மற்றும் அரசுப் பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ளசில ஆண்டுகளுக்கு முன்பு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளன. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே எரியாமல் உள்ள தெருவிளக்குகளை ஒளிர்விடச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்