சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-02-08 11:35 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் இருந்து முத்தையம்பாளையம் வழியாக நாகநல்லூர் செல்லும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள உயரழுத்த மின்கம்பம் பழுதடைந்து முறிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழியாக வைரிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், பள்ளி வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வரும்போது மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்