பெருந்துறை சின்னவீரசங்கிலி ஊராட்சி பெரியவீரசங்கிலி பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?