தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-06-01 14:14 GMT

திருச்சிற்றம்பலம் ஊராட்சி நரியங்காடு கடைத்தெரு சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன. இவை மிகவும் தாழ்வாக செல்வதால் அந்த வழியாக அறுவடை எந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்