மதுரை நகர் பேச்சியம்மன் கோவில் ரோடு சந்திக்கும் ஆறு முச்சந்தியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.