சங்கராபுரம் அருகே குளத்தூர் மும்முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.