அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் உள்ள ஓடை பகுதியில் மும்முனை மின்சார கம்பியும், இருமுனை மின்சார கம்பியும் அருகருகே செல்கின்றன. இதனால் காற்று உராய்வு ஏற்பட்டு அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இதனால் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அடிக்கடி அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.