தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு-அறந்தாங்கி முக்கம் செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பம் வளைந்து நிற்பதால் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்