திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார் நகர் 4-ம் வீதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து எப்போது வேண்டுமானும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.