பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2024-09-15 07:49 GMT

காவல்கிணறு-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலும் அதன் அருகில் பயணிகள் நிழற்குடையும் உள்ளது. இந்த நிழற்குடையின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள், வயதான முதியோர்கள், பயணிகள் இரவு நேரங்களில் பாதுகாப்பாற்ற நிலையில் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். மேலும், வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி ஒளிர வைக்க வேண்டும்.

-ராம்சங்கர், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்