தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பொன்னாப்பூர் மேற்கு பகுதி அம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. மின்கம்பம் இருக்கும் பகுதியை கடந்து தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்