சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-07-28 09:57 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்புகாரதெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. கோவிலில் எதிரே அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இருக்கிறது. இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பத்தில் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்