தஞ்சை மாநகராட்சி பகுதி ஜே.பி.எல்.நகர் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?