விபத்து அபாயம்

Update: 2024-07-14 07:17 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் மீன்கடை உள்ளது. இந்த மீன்கடையின் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்