எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

Update: 2024-05-26 17:05 GMT

எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே 5 சாலைகள் சந்திக்க கூடிய ரோடு உள்ளது. பெங்களூரு, சேலம், சென்னை சாலைகள், சப்-ஜெயில் சாலை, காந்தி சாலை என முக்கிய சாலைகள் சந்திக்க கூடிய இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் பெரும்பாலான நாட்கள் இரவில் எரிவதில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்