சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-05-19 11:04 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே முத்துப்பேட்டை சாலையும் கல்லணைக்கால்வாய் வாய்க்காலும் இணையும் இடத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் மேற்பகுதியில சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பத்தின் மேற்பகுதி எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்