ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2023-12-24 10:32 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா 16 உக்கரை வட்டம் தத்துவாஞ்சேரி கீழத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மின்கம்பம் வலுவிழந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உருவாகி உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்