சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-03 13:01 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் முதல் தெருவில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. இதனால் மின்கம்பத்தில் அடிப்பகுதி துருப்பிடித்து ஓட்டைவிழுந்து உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்