தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் உத்தண்டி குளக்கரை அருகே மின்வாரிய அலுவலகத்துக்கு எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருக்கும் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?