கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளியில் இருந்து குனில்வயல் பகுதிக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சில இடங்களில் கேபிள் வயர்களும் மின் கம்பிகளை தொட்டவாறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.