தஞ்சை மாவட்டம் மெலட்டூர் 2-ம் சேத்தி சிவன் கோவில் எதிரே வயல்வெளி பகுதி உள்ளது. அங்குள்ள ஒரு வயலின் நடுவே மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் மின்கம்பம் மெல்ல, மெல்ல சாய்ந்து வருவதால் விவசாயத்தொழிலாளர்கள் அச்சத்துடன் பணி செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.