வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கைக்கு எட்டும் தூரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் டிராக்டர், நெல் அறுவடை எந்திரங்கள், வைக்கோல் கட்டுகள் ஏற்றிய லாரிகள் செல்ல அச்சமாக உள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகள் எந்த நேரத்திலும் அறுந்து கீழே விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின்னழுத்த கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட முன்வர வேண்டும்.
-குமார், வள்ளுவம்பாக்கம்.