ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-24 19:30 GMT

காட்பாடி வி.ஜி.ராவ்நகர் பகுதியில் ‘சி’ செக்டார் வடக்கு தெற்கு வீதியில் ஒரு மின்கம்பத்தின் உச்சியில் பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ளது. சற்று பலமாக காற்று வீசினால் மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்து கீழே விழும் அச்சம் உள்ளது. அதோடு இணைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயமும் மக்களிடையே உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-ப.கி.மனோகரன், காட்பாடி.

மேலும் செய்திகள்