சென்னை சைதாபேட்டை நியூ காலனி 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின் விளக்கு அமைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு, தெரு விளக்கு மீண்டும் ஒளிர தொடங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்