சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் முதல் தெருவில் உள்ள மின்சார பெட்டி ஆபத்தான முறையில் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வித அச்சத்துடனே இந்த சாலையை கடந்து செல்கிறார்கள். எனவே மின்வாரியம் கவனித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.