சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-08-13 12:36 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கல்லுக்கடை அருகில் கணபதி நகர் கடைசி தெருவில் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் அமைந்துள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்