பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் அருகாமையில் உள்ள ரோஸ் நகர் குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் இரவு நேரங்களில் இப்பகுதியில் நடமாட முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் ரோஸ்நகர் மற்றும் கார்டன் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.