பழுதடைந்த மின்மாற்றியால் இல்லத்தரசிகள் அவதி

Update: 2022-08-01 14:24 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரசமரம் பிள்ளையார் கோவில் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மின்மாற்றி பழுது ஏற்பட்டது. இதனால் வேறொரு மின்மாற்றியில் இருந்து குடியிருப்பு பகுதியில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் குடியிருப்பு பகுதிகளில் சரிவர மின்திறன் வராததால் வீடுகளில் குடிநீர் மின் மோட்டார், கிரைண்டர், மிக்சி போன்ற சாதனங்கள் இயக்க முடியாமல் இல்லத்தரசிகள் அல்லாடி வருகின்றனர். பஸ் நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் ஊருக்குள் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்