தியாகதுருகம் அய்யப்பா நகர் குடியிருப்பு பகுதியில் கையால் தொடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக மின்கம்பங்களுக்கு இடையே மின்கம்பி செல்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மின் விபத்து ஏற்படும் முன் மின்கம்பியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.