நெல்லை வண்ணார்பேட்டை சாலைதெருவில் பொது கழிவறை அமைந்துள்ளது. இதற்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படுத்தும் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. கடந்த பல மாதங்களாகவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதை பழுதுநீக்கி மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.