மின்தடையால் மக்கள் அவதி

Update: 2022-07-25 15:51 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், காளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மல்லசமுத்திரம் டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரத்தை நம்பி தொழில் செய்வோர், மாலையில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த கிராமங்களில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, நாமக்கல்.

மேலும் செய்திகள்